Sunday, March 23, 2008

ஒன்பது வகை பக்தி

1. ஸ்ரவணம் -இறைவனின் புகழை பிறர் கூறக்கேட்பது ( பரீட்சித்து மன்னன்) 2. கீர்த்தனம்-இறைவனின் புகழை பாடிக்கொண்டே இருத்தல் (நாரதர்) 3. விஷ்ணுஸ்மரணம்-இறைவன் நாமத்தை எப்போதும் ஜபித்துக் கொண்டே இருத்தல் ( பிரகலாதன் ) 4. பாதஸேவனம்-இறைவனது பாதங்களை சரணடைந்து அவருக்கு ஸேவை செய்தல்( லட்சுமி ) 5. அர்ச்சனம்-இறைவனை வழிபட்டு ஆராதித்தல் 6. வந்தனம்-வணங்கிக் கொண்டே இருத்தல் ( அக்ரூரர்) 7. தாஸ்யம்-இறைவனுக்கு சேவை செய்தல் ( அனுமார்) 8. சக்யம் -இறைவனை நண்பனாக பாவித்தல் ( அர்சுனன் ) 9. ஆத்மநிவேதனம்-இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தல்(ராதா)

குரு

நமச்சி வாயவே ஞானமும் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே

கலைமகள் துதி

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்அம்மை- தூய

உருப்பளிங்கு போல்வாள் என்உள்ளத்தின் உள்ளே

இருப்பள் இங்கு வாராது இடர்

மகாகவி கம்பர்

முதல்வணக்கம்

திருவும் கல்வியும் சீரும் சிறப்பும்உன் திருஅ டிப்புகழ்பாடுப் திறமும்நல் உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா உணர்வும் தந்துஎனது உள்ளத்து அமர்ந்தவா குருவும் தெய்வமும் ஆகிஅன் பாளர்தம் குறைத விர்க்கும் குணப்பெருங் குன்றமே வெருவும் சிந்தை விலகக் கஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே ஸ்ரீ இராமலிங்க அடிகளார்