Saturday, December 6, 2008

பேரூர்- மேலைச்சிதம்பரம்

சமீபத்தில் பேரூர் சென்றிருந்தேன்.கோவையிலிருந்து 10 கி.மி.தொலைவில் உள்ளது.கோவிலின் உள்ளே ஒரு அறிவிப்பு இருந்தது.பேருரின் சிறப்பு இறவாப்பனை மற்றும் பிறவாப்புளி என்பதுதான் அது.எனவே அந்த இறவாப்பனை இருக்கும் இடத்தை தெரிந்துகொண்டு அங்கே சென்றேன்.
அந்த மரத்தைப் பார்த்துவிட்டு அதன்அருகிலுள்ள பூட்டியிருந்த கோவிலைப் பற்றி விசாரித்தேன்.அக்கோவிலின் பெயர் '' வட கயிலாயம் '' எனவும் பிரம்மா வழிபட்ட தலம் எனவும் கூறினர்.
ஆனால் கோவில் எப்போதும் பூட்டியே கிடந்தது.சிறிது முயற்சிக்குப் பின் கோவில் அர்ச்சகர் கிடைத்தார். கோவிலின் உள்ளே சிறிய கிணறு ஒன்று இருந்தது.கேட்டபோது அது '' பிரம்ம தீர்த்தம் '' எனவும் மனநோய் தீர்க்கக்கூடியது என்றும் கூறினார்.உள்ளே எட்டிப்பார்த்தால் குப்பைமேடாக இருந்தது.''என்னங்க இப்படி இருக்குது'' என அருகில் இருந்தவர்களை கேட்டபோது பேரூர் கோவில் கும்பாபிஷேகத்தில் உபயோகித்த மாலைகளை கொண்டுவந்து இந்த கிணற்றில் 10 வருடங்களுக்கு முன் போட்டுவிட்டனர்.அதன்பின் இந்த கிணறு பயன்படுத்த முடியாமல் போய்விட்டது என்றனர்.

1 comment:

Unknown said...

your post is informative. My home town in Coimbatore and visited the temple several times but have not explored it to this extent because of the dirty surrounding. After reading your post i feel like going there and see every detail.