வடகயி லாயத் தெல்லை வயங்கிய பிரம தீர்த்தங்
கடன்முறை மூன்று பக்கங் காதலி னாடி யுள்ளும்
படர்தரப் பருகி னோர்க்குப் பகர்ந்தநான் மலடுநீங்கும்
அடர்தரு பூத மண்ணை யாதியி னலைப்புந் தீரும்
வடகயிலாயத்தின் எல்லையிலே விளங்கும் பிரமதீர்த்தத்திலே விதிப்படி மூன்றுபக்கம் ( ஒரு மண்டலம் ) விருப்பத்துடன் முழுகி,அந்த நீரைப் பருகினோர்க்கு நான்வகை மலடுகள் ( பிள்ளை பெறாமை,கருவினுள் அழிதல்,சாப்பிள்ளை பெறுதல்,ஒருமகப் பெறுதல் ) நீங்கும்.வருத்துகின்ற பூதம்,பேய் முதலியவற்றினால் நேரும் துன்பங்கள் தீரும்.
Tuesday, December 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நண்பரே, இந்த மாதிரியான கோவில் திருப்பணி வெகு நல்ல முயற்சி. செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. நண்பர்களையும் சும்மா கூட அழைத்து போங்கள். யார் ஆர்வம் எடுத்துக்கொண்டு சேர்ந்து கொள்வார் என்று யாருக்கு தெரியும்.
தொடருங்கள்.
வவலைப்பூவில் 4 வரிகள் எழுதுவது நல்ல ஒரு உத்தி. ஆனால் தினசரி எழுத வேண்டும். அப்போதுதான் யாரும் தொடர்ந்து படிப்பர்.
வாழ்த்துக்கள்.
அருமையான தலைப்புடன், அரங்கேறும் தல புரணங்களில் பெருமை சேர்க்கின்றன,
வாழ்த்துக்கள்!
நல்ல செயலைச் செய்திருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள். கோவில் கட்டவும், திருப்பணிகள் செய்யவும் கொடுப்பினை வேண்டும் என்பர். அதன்படி நீங்கள் கொடுத்து வைத்தவர்..தொண்டினையும், பதிவினையும் தொடருங்கள்.
வருகை தந்த திரு.திவா,திரு.ஜீவா,திரு.மதுரையம்பதி
அவர்களுக்கு நன்றி.
அருமையான ஒரு திருப்பணியை செய்திருக்கின்றீர்கள், தங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.
Post a Comment